நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் திமுக ஆட்சியில் பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர் வைக்க சென்னை நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அப்போதைய அதிமுக தலைமையிலான அரசு உள்ளாட்சித் துறை மூலம் செயல்படுத்தி வந்தது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றியை கொண்டாடும் வகையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை சுற்றிலும் ஆபத்தான முறையில் திமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர்.
கரூர் நகரில் நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளிவிட்டு நகர் முழுவதும் திமுகவினர் பேனர் வைத்துள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது