தாம்பரத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக அனுமதியின்றிப் போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் திமுக சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முறையான அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் மீது தாம்பரம் காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டம் என்ற பெயரில் அராஜகப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். பல மாவட்டங்களில் போராட்டத்திற்குக் கூட்டம் சேர்ப்பதற்காகப் பெண்கள், முதியவர்களுக்குப் பணம் கொடுத்து லாரிகளில் அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.