காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததால், திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீல் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வள்ளிபட்டு கிராமத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சமூகநலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீல், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு அனைத்து தரப்பு மக்கள் மற்றும் விவசாயிகளின் பாரட்டை அவர் பெற்றதாகத் தெரிவித்தார். இருப்பினும் இதனை பொருத்துக்கொள்ள முடியாத திமுக, பழி கூற வேண்டும் என்ற எண்ணத்தில், அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் நிலோபர் கஃபீல் குற்றம்சாட்டினார்.