ரஜினிகாந்தை கண்டு அஞ்சுகிறது தி.மு.க -மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்தை கண்டு தி.மு.க அஞ்சுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மீன்வளத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக கூறினார். இலவுகாத்த கிளியாக ஸ்டாலினும், வால் அறுந்த நரியாக டி.டி.வி.தினகரனும் உள்ளதாக விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினிகாந்தை கண்டு தி.மு.க அஞ்சுவதாக தெரிவித்தார். யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.க வின் வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

Exit mobile version