ஏழைகளின் நலனுக்காக செயல்படும் அதிமுக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே திமுகவினர் திட்டமிட்டு அவதூறு கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். மதுரையில் கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கள்ளிக்குடியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் குழந்தைக்கு ஜெயந்தி என்று முதலமைச்சர் பெயர் சூட்டினார். பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திமுக குடும்பக் கட்சி என்றும், அதிமுகவே தொண்டர்களின் கட்சி என்றும் தெரிவித்தார். திமுகவினர் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது குற்றம்சாட்டிவருவதாக கூறிய முதலமைச்சர், ஒருபோதும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்று தெரிவித்தார்.
200 கோடி ரூபாயில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்த ஒப்பந்த வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராமம் முதல் நகரம் வரை அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.