தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி, 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், எந்த மாவட்டத்திலும் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், வெறும் கண் துடைப்பு நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாகவே நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியே நிறைவுபெறாத நிலையில், கடந்த 20ம் தேதி முதல், 18 வயது முதல் 44 வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை, திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆனால், அன்றைய தினம் வெறும் 15 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. எந்த மாவட்டத்திலும் தடுப்பூசிகள் இருப்பு இல்லாத நிலையில், யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையில், இளைஞர்கள் மற்று நடுத்தர வயதுடையோர் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.