மக்களை கூட்டத்தில் நிறுத்திவைக்க திணறிய திமுக நிர்வாகிகள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்த திமுக தலைவர் ஸ்டாலின், நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததால், கூட்டத்திற்கு வந்த பெண்கள் கலைந்து சென்றனர். ஸ்டாலின் உரையை தொடர்ந்து கேட்க முடியாமல் சிலர் தூங்கினர்.

ராமேஸ்வரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை 4 மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மிகவும் காலதாமதமாக 6.45 மணிக்கு கூட்டத்திற்கு வந்தார். அதன் பிறகு மேடையில், வெகுநேரமாக எதிர்கட்சிகளை குறைக்கூறி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாக அவர் பேசியதால் அசதியடைந்த கூட்டத்திற்கு வந்த பெண்கள் தூங்கியதால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நீண்ட நேரமாக ஸ்டாலின் பேசியதால் கூட்டத்தில் இருக்க முடியாமல், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கலைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் அதிகமான அளவில் நாற்காலிகள் காலியாக இருந்தன. அவர்களை கூட்டத்தில் தொடர்ந்து இருக்க வைக்க முடியாமல், திமுக நிர்வாகிகள் திணறினர்.

Exit mobile version