தேல்வி பயம் காரணமாக திமுகவினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் சாதிக் கலவரங்களை தூண்டி விடுவதாக, பாமக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகள், காவல் கண்காணிப்பாளர் சரவணனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு, கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து சமூகத்தினரும் அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளதாகவும், தோல்வி பயம் காரணமாகவே, திமுகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வன்முறை ஏற்படும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.