எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி திமுக யோசிக்கக் கூட இல்லை

காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி செய்த திமுக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்கக் கூட இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, காங்கிரசுடன் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது பற்றி யோசிக்க கூட இல்லை எனக் கூறினார்.

Exit mobile version