தன்னை நேரில் சந்திக்க திமுகவிற்கு துணிவில்லை : கு.க.செல்வம்!!

கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலினின் தலையீடு தான் காரணம் என ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சாடியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். மேலும் திமுக குறித்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை அவர் கூறி வந்த நிலையில், நேற்று திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கு.க.செல்வத்தை நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. கு.க.செல்வம், தன்னை கட்சியிலிருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை என்றார். தான் நேரில் வந்து விளக்கமளிப்பதாக கூறியும், தன்னை நேரில் சந்திக்க துணிவின்றி கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய கு.க.செல்வம், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு உதயநிதி ஸ்டாலினின் தலையீடு தான் காரணம் எனவும், திமுகவில் பல உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர்களும் கட்சியிலிருந்து வெளியே வருவார்கள் எனவும் தெரிவித்தார். 

Exit mobile version