திமுக உண்மைக்கு புறம்பானவற்றை திரித்து கூறுகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுக, மக்களுக்கு எதுவும் செய்யாமல், உண்மையை திரித்துக் கூறி, பொய் பிரசாரம் செய்து வருவதாகவும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, புதிய வகை பிரச்சார வியூகமாக, அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில், மை சூலூர் டாட் இன் எனும் இணையதளம் அறிமுகம் விழா நடைபெற்றது. திமுக வேட்பாளரின் குறைகள் மற்றும் அதிமுக சாதனைகள் உள்ளிட்டவை அடங்கிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி உடனான இருசக்கர வாகனமும் துவக்கி வைக்கப்பட்டது. கோவை சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி,பெஞ்சமின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இணையதளம், பிரசார வாகனத்தை துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திமுக உண்மைக்கு புறம்பானவற்றை திரித்து கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version