மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற திமுக , தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும் என அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக, மத்திய ஆட்சியில் பங்கேற்று தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். இந்த தேர்தல் முடிந்தவுடன் தகுதியுள்ள ஏழைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் தொடரும் என்றார் .