ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத திமுக வெற்றுக் கூட்டணி அமைத்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோருக்கு ஆதரித்து உடைசல்பட்டி இணைப்புச்சாலை பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை தமிழர்கள் நலனில் அக்கறையில்லாமல் திமுக, காங்கிரஸ் கூட்டணி நடந்துகொண்டதை தமிழக மக்கள் அறிவார்கள் என்றார். இலங்கையின் போர் குற்றநடவடிக்கைக்கு எதிராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி துணை முதலமைச்சர், இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார்.