வேலூர் சத்துவாச்சாரி விஜயராகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது சகோதரர் நடத்தும் பார்க்கிங் யார்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டு திமுக கவுன்சிலரான சேகர் என்பவர் ராஜசேகரின் பார்க்கிங் யார்ட்டின் முன்பக்கத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக கேள்வி கேட்ட ராஜசேகரை, சேகர் மற்றும் அவரது உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் வெளியான நிலையில் அராஜகத்தில் ஈடுபட்டுள்ள திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Discussion about this post