திருச்சி மாநகராட்சியின் கடந்த இரு கூட்டங்களும், அமாவாசை நாட்களில் நடத்தப்பட்ட நிலையில், திமுக அரசின் தில்லுமுல்லு திராவிட கோட்பாடு குறித்து கவுன்சிலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து இரு கூட்டங்களும் அமாவாசை நாட்களில் நடத்தப்பட்டதால் சந்தேகம் அடைந்த சில கவுன்சிலர்கள், ஜோதிடர் அறிவுறுத்தலின் பேரில் நல்ல நாள் பார்த்து கூட்டம் நடத்தப்படுகிறதா? என மேயரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் தேநீர் மற்றும் தின்பண்டம் வழங்கப்பட்ட நிலையில், அமாவாசை விரதம் இருக்கும் நாளில் இப்படி தின்பண்டம் வழங்கலாமா? என்றும் சில கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதாகவும் கூறப்படுகிறது.