வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக- காங்கிரசு கூட்டணி ஆட்சி இதுவரை மக்கள் நலனுக்காக பாடுபட்டதில்லை என குற்றம்சாட்டினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மட்டும்தான் மக்களுக்கான நல்ல பல திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.