திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி இன்று தொகுதி ஒப்பந்தம்

காங்கிரஸ்- திமுக இடையேயான தொகுதி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, அதிமுக-பாஜக-பாமக இடையே, நேற்று ஒரே நாளில், அதிரடியாக கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக- காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, திமுக எம்.பி கனிமொழி, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார். இதையடுத்து, அறிவாலயத்தில் மாலையில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது மாலையில் தெரிந்து விடும்.

Exit mobile version