அவதூறு செய்திகளைப் பரப்பும் திமுக-முதலமைச்சர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக அரசு கலைந்து விடும் என நினைத்தவர் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். காசிமேட்டில் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜூக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், ஸ்டாலினின் தப்புக் கணக்கு என்றும் பலிக்காது என்றும், அதிமுகவில் கடைமட்ட தொண்டனும் முதலமைச்சராக வர முடியும் எனவும் தெரிவித்தார்.

கொடநாடு விவகாரத்தில் திமுக பரப்பிய அவதூறு பிரசாரம் பொய்யாகி விட்டதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஆட்சியில் இல்லாத போதே, அவதூறு செய்திகளை பரப்பி, கூலிப்படைக்கு துணை போகும் திமுக ஆட்சி வந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version