திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், திமுக வேட்பாளரை வரவேற்று திமுகவினர் வெடித்ததில், அருகே இருந்த குடிசை தீப்பற்றி எரிந்தது.
ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வில்வநாதன் அரங்கல்துர்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக திமுகவினர் பட்டாசு வெடித்ததில், அருகில் இருந்த குடிசை மீது தீப்பொறி விழுந்து தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்த மின் கம்பத்தில் தீ பரவியதால் மக்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர். விபத்தில் குடிசை முற்றிலும் எரிந்ததில், அதில் வைக்கப்பட்டிருந்த அரிசி, மாட்டு தீவன மூட்டைகள் சேதமடைந்தன.