பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் விரட்டியடிப்பு!

திருநெல்வேலியில் பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 43-வது வார்டில், திமுக வேட்பாளர் லட்சுமணன் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அந்த பகுதி மக்கள், தேவேந்திர குல வேளாளர் பெயர் மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், திமுகவை சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வரக்கூடாது எனக் கூறி திமுக வேட்பாளர் லட்சுமணனுடன் மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version