பண்ருட்டி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கோஷ்டி சண்டை

கடலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சால்வை அணிவிக்க சென்ற இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமே தொடர்ச்சியாக சால்வை அணிவிக்க அனுமதிக்கப்பட்டது.

இதனால் பொறுமையிழந்த மற்றொரு பிரிவினர் தகராறில் ஈடுபட்டனர். திமுக கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்ட இந்த சண்டை அங்கு கூடியிருந்த தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version