நீலகிரி மக்களவை திமுக வேட்பாளர் ஆ. ராசா பிரசாரத்தின்போது தொண்டர்கள் இல்லாததால் பாதியிலேயே முடித்து விட்டு திரும்பினார். நீலகிரி மக்களவை திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட தாளவாடி பகுதியில் ஆ.ராசா பிரசாரம் செய்தார். அப்போது, தொண்டர்கள் குறைவாக இருந்ததாலும், அவர் பிரசாரத்தை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சென்றதாலும் ஆத்திரமடைந்து பிரச்சாரத்தை பாதியிலே முடித்துவிட்டு ஆ.ராசா கிளம்பினார்.
பொதுவாகவே திமுக கூட்டணி கட்சியினரின் பிரசார கூட்டங்கள் வெரிச்சோடி காணப்படுவதால் திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.