கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், ஊரடங்கு விதிகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்பக் கேட்டு, திமுக பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பீச் ஜங்சன் பகுதியில், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஊரங்கு விதிகளை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை காவல்துறையினரிடம் இருந்து மீட்டு தரக் கோரி, திமுக பிரமுகரும் குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவருமான ரூபனை அணுகியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த ரூபன் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்பக் கேட்டு அவர் அடாவடி செய்ததால், அங்கு பரபரப்பு நிலவியது.