உதயநிதிக்காக தங்கம் தென்னரசை திமுகவினர் பலி கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
நாளை திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்நிலையில், இன்று பதவி ஏற்கும் அமைச்சரவைக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுக்கப்பட்டுள்ளது.
மாறாக அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளி கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதிக்காக புதியவர்கள் பலரையும் அமைச்சரவையில் சேர்ப்பதாக திமுக வட்டாரங்களில் சலசலப்பு உலவி வந்த நிலையில், இன்று வெளியான அமைச்சரவை பட்டியல் இதனை உறுதி செய்திருக்கிறது.
அத்துடன் பள்ளிக்கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவரை பலி கொடுத்துவிட்டு, புதியவரை அமைச்சராக்கி குழந்தைகளின் கல்வியில் சோதனை முயற்சி செய்கிறது திமுக என்றும் சமூக வலைதளங்களில் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துவருகின்றனர். அனுபவசாலிகளை கடந்து கட்சியில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை இது உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.