கெட்டுப் போன மாவைக் கொடுத்த மளிகைக் கடையில் முறையிடச் சென்ற எழுத்தாளர் ஜெயமோகனைத் தாக்கியவர் ஒரு திமுக நிர்வாகி என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…
எழுத்தாளர் ஜெயமோகனை நேற்று இரவு தாக்கியவர் செல்வம், இவர் நாகர்கோவிலில் திமுகவின் 17ஆவது வட்ட பிரதிநிதியாக உள்ளார். ஜெயமோகனின் புகாரையடுத்து செல்வம் நேசமணி நகர் காவல்நிலைய காவலர்களால் செல்வம் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கெட்டவார்த்தையால் திட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு கைது செய்யப்பட்டார். அங்கு செல்வத்திற்கு ஆதரவாக திமுக நகரச் செயலாளர் மகேஷ் வந்து காவல்துறையினரிடம் பேசினார். ஆனால் தாக்கப்பட்டவர் ஒரு பிரபலம் என்று தெரிந்ததும் மகேஷ் திரும்பிச் சென்றார்.
செல்ஃபோன் கடை, பிரியாணிக்கடை, அழகு நிலையம், ரயில் – என பொது இடங்களில் இதுவரை சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த திமுகவினர் இப்போது பிரபலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.