நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்த விதவைப் பெண்ணை திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகதாஸ் பணி நீக்கம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணித்தள பொறுப்பாளர் பதவி வகித்து வந்தவர் செல்வி. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவி தாமரைச் செல்வியின் கணவர் முருகதாஸ், வேலைக்கு வராத 25 நபர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்ய கூறியுள்ளார். இதற்கு மறுத்த அவரை பணியில் இருந்து நீக்கி விட்டு, திமுகவைச் சேர்ந்த நபருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்ட செல்வி மற்றும் அவரது குடும்பத்தினரை ஆடியாட்களுடன் சென்று தகாத வார்த்தையில் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு இடங்களில் தங்களுக்கு சாதகமாக இல்லாத ஊழியர்களை நீக்கி விட்டு, தனங்களுக்கு வேண்டியவர்களை பணியமர்த்தும் சம்பவம் தொடர்கதையாவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.