வேலூர் மாவட்டம் திமுக கோட்டையா? மக்களை அச்சுறுத்தும் திமுக பிரமுகர்!

வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் திமுக பிரமுகர் ஒருவர்,

இதனை எதிர்க்கும் பொதுமக்களிடம் வேலூர் மாவட்டம் திமுகவின் கோட்டை என்பதால் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் மேல்மணவூரில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் காலியாக இருக்கிறது.

இங்கு ஒரு சில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள இடத்தில் ஐடிஐ கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதான சாலையில் இருக்கும் இந்த நிலத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஆண்டு சிறய பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டியுள்ளனர்.

இந்த கோயிலை தான் செலவு செய்து பராமரிப்பதாக, கூறி உள்ளே நுழைந்த திமுக கிளை செயலாளர் சிவா, அதன் பின் அங்கே தங்கிவந்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வரட்டும் என்று காத்திருந்த சிவா தற்போது நிலத்தை ஆக்ரமிக்க தொடங்கிவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

முதலில் கோயில் அருகே தங்கி இருந்த திமுக பிரமுகர் சிவா தற்போது கோயில் பக்கத்தில் சிறிய அளவிலான கட்டடம் ஒன்றையும் கட்டியுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ந்து போன கிராமமக்கள் சிவாவிடம் கேட்டபோது அவர்களை மிரட்டிள்ளார்.

மேலும் வேலூர் மாவட்டம் திமுக கோட்டை என்றும், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் திமிரோடு பேசியவிரட்டியடித்துள்ளார்.

அர்சுக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து காம்பிளக்ஸ் ஒன்றை கட்ட வேண்டும் என்பது திமுக பிரமுகர் சிவாவின் திட்டம் என்று மேல்மணவூர் கிராம மக்களின் புகாராக இருக்கிறது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக முக்கிய புள்ளி ஒருவர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

சிவாவிடம் இருந்து நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்த நடவடிக்கைக்காக காத்து கிடக்கின்றனர்.

Exit mobile version