தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் – டீசல் விலை குறைக்கப்படும் என அறிவித்த தி.மு.க, தற்போது விலை குறைக்க வாய்ப்பே இல்லை என கூறுவது அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு வாய்ப்பே இல்லை என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளது திமுகவின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசும் அதே அளவு வரிகளை விதிப்பதாகவும், இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1ரூபாய் 30 காசு கூடுதலாக தமிழக அரசு வரி வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. சொல்லாததை மட்டுமல்ல சொல்வது எதையும் திமுகவினர் எப்போதும் செய்யப்போவதில்லை என்பது பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.