திமுக அராஜகத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதி.!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், திமுகவினர் நடத்திய நிகழ்ச்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

திமுக எம்.பிக்கள் கௌதம சிகாமணி மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் ஏராளமான திமுகவினர் ஒண்டிக்கடையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்பு கூட்டம் கூட்டமாக வாகனங்களில் ஏற்காடு நோக்கி சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . திமுகவினரின் இச்செயலால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

தொடர்ந்து மஞ்சக்குட்டை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், திமுகவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரசார வாகனம் மற்றும் திமுக நிர்வாகிகளின் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள், சாலையின் நடுவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், பிழியூர், வெள்ளக்கடை, காவேரி பீக், நல்லூர், பெரியேரிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், விடுமுறை தினத்தில் ஏற்காடு நோக்கி சென்ற சுற்றுலாப் பயணிகளும் வெகு நேரம் சாலையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

Exit mobile version