வன்முறையை கட்டவிழ்த்து விடும் திமுக கூட்டணி

நாகர்கோவில் அருகே உள்ள வடசேரியில் அதிமுக கூட்டணி கட்சியினர் மீது, திமுக கூட்டணியினர் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளார் வசந்த குமாரும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்த நாளில் இருந்தே திமுக கூட்டணி கட்சியினர் அரஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண பலத்தை பயன்படுத்தி வெளி மாவட்டங்களில் ஆட்களை வரவழைத்து பிரசாரம் என்ற பெயரில் அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இன்று அதிமுக கொடிகளை கிழித்தெறிந்த திமுக கூட்டணி கட்சியினர், பொன். ராதகிருஷ்ணன் வாகனத்தை வழிமறித்து பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். திமுகவினரின் இந்த அராஜக செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து அதிமுக கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார், பொன். ராதாகிருஷ்ணனிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Exit mobile version