திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணி

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும், தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவராத காங்கிரஸ், திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணி எனவும் குறிப்பிட்டார்.

நாற்பதும் நமதே நாளையும் நமதே என்று சொல்லும் அளவிற்கு அதிமுக தலைமையிலான கூட்டணியின் பணி இருக்கும் என அவர் தெரிவித்தார். 

Exit mobile version