நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
பரமத்திவேலூர் அருகேயுள்ள பொன்மலர்பாளையம் காவிரி ஆற்றை பார்வையிட திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் சென்றுள்ளார். தொகுதி மக்களுக்காக நலத்திட்டங்களை எதுவும் செய்யாமல், சுயவிளம்பரம் தேட எம்.பி. சின்ராஜ் முயற்சிப்பதாக கூறி பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய திமுக கூட்டணி கட்சி எம்.பி. சின்ராஜ், நிதானத்தை இழந்து பொதுமக்களை அநாகரீகமாக பேசிய பரபரப்பை ஏற்படுத்தியது.