திமுக கூட்டணி பிரசார மேடையில் மதிமுக கொடி இல்லை- மதிமுகவினர் அதிர்ச்சி

திமுக பிரசார மேடையில் மதிமுக கொடி இல்லாததால் வைகோ ஆதரவர்கள் அதிர்ச்சியடைந்து, அதிருப்தியடைந்தனர்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து வாக்கு சேகரிக்க அமைக்கப்பட்ட பிரசார மேடையில் அனைத்து கூட்டணி கட்சியினரின் கொடிகளும் இடம்பெற்றன.இதில் வைகோவின் மதிமுக கட்சியின் கொடி இடம்பெறவில்லை. இதனால் மதிமுகவை திமுக ஓரங்கட்டுவதாக எண்ணிய மதிமுக தொண்டர்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகினர்.

Exit mobile version