திமுக கூட்டணிக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களை வலுகட்டாயமாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதற்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சியான இந்திய முஸ்லிம் லீக்கின் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அப்பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களை வாக்கு சேகரிக்க வற்புறுத்தி ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செமெஸ்டெர் தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்கள் கட்டாயப்படுத்தி துண்டு பிரசுரம் வழங்க நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கல்லூரி நிர்வாகமும் ஒத்துழைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் கல்லூரியின் நிர்பந்தத்திற்கு இணங்க மாணவர்களை வெயிலில் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதும் அதனை கண்காணிக்க ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது மனவேதனை அளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
தோல்வி பயத்தில் திமுக கூட்டணியினரின் இம்மாதிரியான செயலில் ஈடுபடுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.