தமிழக அரசியல் வரலாற்றில் சூடு குறையாத பிரச்சினையாக இன்றும் தொடர்கிறது கச்சத்தீவு விவகாரம்.
இந்தியாவுக்குச் சொந்தமான, குறிப்பாக தமிழக மீனவர்களின் உரிமைக்கு பாத்தியப்பட்ட கச்சத்தீவு, சேதுபதி மன்னர் காலம்வரை, வரிக்குட்ப ஆளுகை பரப்பாக இருந்தது.
20நூற்றாண்டு வரைக்கும் இருந்த இந்த உரிமையை 1974ஆம் ஆண்டு தட்டிப்பறித்து தாரைவார்க்க முடிவெடுத்து அப்போதைய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது இந்திய அரசு.
ஒப்புக்கு சில சமாதனங்களை பொதுவெளியில் பேசியதோடு, செயல்படப்போவதில்லை என்று முடிவெடுத்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றினார் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி.
ஏனெனில், மாநில அரசு தீர்மானம் ஒருபக்கம் ஒப்புக்கு இருக்க, கச்சத்தீவை கொடுக்கும் முடிவில் தீர்மானமாக இருந்த அரசுக்கு நிலைமையை புரியவைக்கும் முயற்சியை மட்டும் முழுபொறுப்புடன் செய்யவே இல்லை.
விளைவு, கச்சத்தீவு இலங்கை வசமானது. தமிழக மீனவர் வாழ்வு கண்ணீர் வசமானது.
மீண்டும் மீண்டும் இதை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் வித்தையை மட்டும், திமுக அரசு கைவிடவே இல்லை.