முதலமைச்சருடன் தேமுதிக வேட்பாளர்கள் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல்.கே.சுதீஷ், வடசென்னை மோகன்ராஜ், திருச்சி இளங்கோவன், விருதுநகர் வேட்பாளர் அழகர்சாமி ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Exit mobile version