தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிடுகிறார்

மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அதிமுகவுக்கு 20 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், தேமுதிக 4 இடங்களிலும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேமுதிக சார்பில் போட்டியிடும் 4 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிடுகிறார்.

Exit mobile version