தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 1.80 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் அமையவுள்ள டி.எல்.எப் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய கட்டடம் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியால் தமிழகம் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக திகழ்வதாக கூறினார். அமெரிக்காவில் தான் தொடங்கி வைத்த, யாதும் ஊரே திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 721 கோடி முதலீடுகள் செய்யப்பட்டு, 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.