கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவக்குமாரை, அக்டோபர் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, கடந்த 3ஆம் தேதி அவரைக் கைது செய்தது. 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்த டி.கே.சிவக்குமார், செப்டம்பர் 17ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
காவல் முடிந்ததை அடுத்து, அவர் மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், டி.கே. சிவக்குமாரை அக்டோபர் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலில் டிகே சிவக்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பரிசோதனையில் அவரது உடல் நிலை ஒத்தழைக்கும் பட்சத்தில் திகார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். உடல் நலம் ஒத்தழைக்காத பட்சத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.