தீபாவளியை முன்னிட்டுக் கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம், கண்காணிப்புக் கோபுரம் அமைத்து காவல்துறை பாதுகாப்பு

தீபாவளிக்குப் பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்துள்ளதால், கோவை கிராஸ்கட் சாலையில் காவல்துறையினர் கண்காணிப்புக் கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள துணிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. துணிகள், நகைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் வாங்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளால் கோவை கிராஸ்கட் சாலையில் கண்காணிப்புக் கோபுரம் அமைத்துக் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு, நெரிசல் ஆகியவற்றைத் தடுக்க ஒலிப்பெருக்கி மூலம், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பறக்கும் கேமரா மூலமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

Exit mobile version