தீபாவளி சீட்டு நடத்தி ரூ.12கோடி மோசடி செய்த திமுக பிரமுகர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், தீபாவளி சீட்டு நடத்தி 12 கோடி ரூபாயுடன் தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் உட்பட 3 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 27-ஆம் தேதி, திமுக பிரமுகர் முரளி என்பவர், ராகவேந்திரா பைனான்ஸ் என்ற நிறுவனம் மூலம் தீபாவளி சீட்டு துவங்கியுள்ளார். இதனை நம்பி 9 ஆயிரத்து 500 பேர் செலுத்திய 12 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, திமுக பிரமுகர் முரளி தலைமறைவானார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், 3 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளியான திமுக பிரமுகர் முரளியை காவல்துறையினர் தேடி வந்தனர்.இந்த நிலையில், திருக்கோவிலூர்-ஆசனூர் புறவழிச் சாலையில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், திமுக பிரமுகர் முரளி பிடிப்பட்டார்.

மேலும், அவரிடமிருந்து 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் உட்பட, முரளி சென்ற வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version