அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 27ல் தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ள நிலையில், தமிழக அரசு பொதுத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொதுத்துறை அரசு ஊழியர்களுக்கு போனசாக 8 .33 சதவீதமும் கருணைத் தொகையாக 11 . 67 சதவீதமும் வழங்கப்படும் என்றும், மின்வாரியம், போக்குவரத்து கழகம், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பிற கூட்டுறவு சங்கஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் நிறுவனங்களின் உபரித்தொகைக்கு ஏற்ப 20 மற்றும் 10 சதவீதம் என பிரித்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 8 , 400 ரூபாய் என்றும் அதிகபட்ச ஊதியம் 16 , 800 ரூபாய் வரையும் வழங்கப்படும் எனவும் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

போனஸ் வழங்குவதன் மூலம் பொதுத்துறை ஊழியர்கள் 3 லட்சத்து 48 , 583 பேர் பயன்பெற உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version