பார்வையாளர்களை கவர்ந்த மாவட்ட அளவிலான 3-வது புத்தக கண்காட்சி துவக்கம்

நாகர்கோவிலில் துவங்கியுள்ள மூன்றாவது புத்தக கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கண்காட்சியை ஏராளமான புத்தக ஆர்வலர்கள் கண்டுகளித்தனர்.மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான 3வது புத்தக கண்காட்சி துவங்கியுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் நூற்றி எட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆன்மிகம், அரசியல், சமையல், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் துவக்கி வைத்தனர். 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், படைப்பாளிகளின் பேச்சுக்கள், உணவு திருவிழாக்கள், உலக திரைப்படக் காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் கொண்ட அரங்கும், ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரங்கும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

Exit mobile version