அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில், நடாளுமன்ற தேர்தல், மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலசைச்சருமான ஓ.பன்னீர்செலவம், இணை ஒருங்கிணைப்பளாரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்தல் குறித்தும், போட்டியிடும் வேட்பாளார்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.