மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி

தூத்துக்குடி அருகே மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது.

கோவில்பட்டியில், நடைபெற்ற தொகுப்பு மேம்பாட்டு அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சியை, மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மானாவாரியில் சிறுதானிய பயறு மற்றும் பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், மானாவாரி பகுதியில் பயிர் சாகுபடி, பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரித்தல் குறித்தும், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்ட வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதே போல், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறையில் தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டம், தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியில், மானாவாரி உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

Exit mobile version