ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கோடை கால கபடிப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று சிறப்பாக விளையாடின. தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் கபடிப் போட்டி முதுகுளத்தூரின் பெரிய கண்மாய் அருகே நடைபெற்றது.
செல்வி அம்மன் செவன்ஸ் சார்பில் 4வது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டிகளை ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.