சமயபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டி போட்டிகள்

திருச்சி, சமயபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டி போட்டிகள் நடைப்பேற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இதில் பேட்மிட்டன், வாலிபால், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது. இப்போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தடகள வீராங்கனை தங்கை மங்கை கோமதி மாரிமுத்து மற்றும் திருச்சி சரக டிஐஜி பரிசுகளை வழங்கினார்கள்.

Exit mobile version