திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 120க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சப் – ஜூனியர், ஜூனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 15 சிலம்பு கலை கூடங்களில் இருந்து 120க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version