சேலம் அருகே சிறுவர் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டி

சேலம் அருகே, சிறுவர் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

ஒரே எடை மற்றும் ஒரே வயதுள்ள இரு வீரர்கள் கையுறை மற்றும் சில பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி முட்டிக்கு மேல் சண்டை போட்டு கொள்வது குத்து சண்டை ஆகும். இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் தனியார் திருமண மண்டபத்தில் 4 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இதைதொடர்ந்து இறுதி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகச்சியில் மேட்டூர் அரசு கலைக்கல்லூரி முனைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் கமிட்டி அதிகாரிகள் மற்றும் பள்ளி சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version