வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி சீல்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி சீல் வைத்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்ட தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று 70.80 சதவிகித வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிவடைந்து, நேற்று மாலை முதலே வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து காலை முதல்கட்டமாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பாக அறைக்குள் வைத்து சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்கள் முன்னிலையில், தேர்தல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்து, பின்னர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கொண்டும், சிசிடிவி கேமராக்கள் கொண்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறைகளை தீவிரமாக கண்காணித்தனர்.

Exit mobile version